குழந்தைக்கு பேச்சு வராததால் தகராறு ..  இளம்பெண் எடுத்த விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


குழந்தைக்கு பேச்சு வராததன் காரணமாக இளம்பெண் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.


ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த  சாய் லட்சுமி என்ற பெண்ணுக்கும்   சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றும் அனில் குமார் என்பவருடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு  இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இதில் மகன் கேதன் கார்த்திகேயாவுக்கு பேச்சு தெளிவாக வரவில்லை.

இந்த விஷயத்தில் கணவர் அணில் குமார் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தார். ஜீன் பிரச்சினை காரணமாகத்தான் மகனுக்கு பேச்சு வரவில்லை என்று மனைவி சாய் லட்சுமியை  துன்புறுத்தி வந்தார். மகனுக்கு பேச்சு சரியாக வரவேண்டும் என்று பல ஆஸ்பத்திரிகளுக்கு மகனை எடுத்துக்கொண்டு மனைவி சுற்றி வந்தார். 

இதையடுத்து மாமியார் பலமுறை மருமகனுக்கு ஆறுதல் சொல்லி வந்தார். மனைவியிடையே இதன் காரணமாக தகராறு ஏற்பட்டு மாதக்கணக்கில் இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில்  கணவருடன் பிரச்சினை தீராததால் அவர் இல்லாத நேரத்தில் தனது பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். பின்னர் நல்ல உறக்கத்தில் இருந்த தன் குழந்தைகளின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி மூச்சு திணற வைத்து கொலை செய்தார்.

அதன்பிறகு அவர், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டை ஆய்வு செய்தனர். அவர் தற்கொலை செய்யும் முன்பாக பெற்றோருக்கு செல்போனில் ஒரு வீடியோ செய்தியை பதிவு செய்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அதில் “அவர் மாற மாட்டார். அதனால் மிகவும் வேதனையாக இருந்த போதிலும் இந்த தவறை செய்து கொண்டிருக்கிறேன். நான் இல்லாத பொழுது என் பிள்ளைகள் உயிரோடு இருப்பது அவசியமில்லை. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி இருந்தார்.

இதுகுறித்து சாய் லட்சுமியின் தந்தை மாறைய்ய பாபு கொடுத்த புகார் மீது, அவரது கணவர் மற்றும் மாமியார், மாமனார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dispute over child not speaking Young woman takes tragic decision


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->