காஞ்சிபுரம் இருமல் மருந்தால் மேலும் 2 குழந்தைகள் பலி!
kidney failure poisoning Coldrif cough syrup Madhya Pradesh
நச்சுத்தன்மை கொண்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால், நாக்பூரில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் குழந்தைகள் மரண எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் முதலில் குழந்தைகள் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் நச்சு கலந்திருப்பது உறுதியாகியதால், அந்த மருந்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கோவிந்தன் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு தமிழ்நாட்டில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது. அந்த குழு தற்போது மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 61 வயது பெண் வேதியியல் ஆய்வாளரையும் கைது செய்துள்ளது. அவர் மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தமிழ்நாட்டில் இவ்வழக்கில் நடைபெறும் இரண்டாவது கைது ஆகும்.
சிந்த்வாரா மாவட்ட கூடுதல் ஆட்சியர் தீரேந்திர சிங் தெரிவித்ததாவது, “நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்தால் செப்டம்பர் 3 முதல் 21 குழந்தைகள் இறந்துள்ளனர். மேலும், பந்துர்னா மற்றும் பெதுல் மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகளும் உயிரிழந்துள்ளதால், மொத்தம் 24 குழந்தைகள் மரணமடைந்துள்ளன,” என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் இதுவரை ஒரு அரசு மருத்துவர், ஒரு ஸ்டாக்கிஸ்ட் மற்றும் மருந்தக உரிமையாளர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மருந்து தயாரிப்பில் பொறுப்பேற்றிருந்த அனைத்து நபர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
kidney failure poisoning Coldrif cough syrup Madhya Pradesh