உங்க நகையெல்லாம் பத்திரமா இருக்கா...? தேனியில் ரூ.14 கோடிக்கு நடந்த மெகா மோசடி...! - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...! - Seithipunal
Seithipunal


தேனியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் இரண்டு கிளைகளில் நடைபெற்ற உள்துறை தணிக்கையின்போது, ரூ.14 கோடி மதிப்பிலான நகைக்கடன் முறைகேடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வங்கி மேலாளர் மற்றும் தொடர்புடைய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி மற்றும் கூழையனூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் இரண்டு கிளைகளில் நடைபெற்ற ஆய்வின் போது, நகைக்கடன் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்கள் சோதனை செய்யப்பட்டன.

அப்போது, வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பல நகை உறைகளில் நகைகள் இல்லாமல் காலியாக இருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ரூ.14 கோடி மதிப்பிலான நகைக்கடன் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில், அந்த இரண்டு கிளைகளில் பணியாற்றிய வங்கி மேலாளர் மற்றும் சில ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த முறைகேட்டால் வாடிக்கையாளர்களின் நகைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், வங்கிக்குச் சொந்தமான நிதி தொடர்பிலேயே இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are all your jewelry safe mega fraud 14 crores took place Theni Customers shock


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->