'தஞ்சை பெரிய கோவிலை விட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிட கலை'; ஆதிமனிதன் கற்திட்டைகளை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்..!
Archaeologists examine 3000-year-old prehistoric stone tablets
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பகுதி பண்ணைக்காடு. இங்கிருந்து தாண்டிக்குடி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள எதிரொலி பாறை அருகே அமைந்துள்ள தொல்லியல் துறை கட்டுபாட்டில் சுமார் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 20-க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் அமைந்துள்ளது.
இந்த கற்திட்டைகள் அமைந்துள்ள பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், கற்திட்டைகள் புதர்கள் மண்டி சிதிலமடைந்து காணப்படுகிறது. இது குறித்து பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று தொல்லியல் துறை சார்பில் உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த பகுதிக்கு வந்து இங்குள்ள கற்திட்டைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் முதற்கட்டமாக இங்கு புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டதுடன், சிதிலமடைந்துள்ள கற்களை தற்காலிகளாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து பேசிய இந்திய தொல்லியல் துறையில் திருச்சி தொல்லியல் துணை கண்காணிப்பாளர் முத்துகுமார், திருச்சியில் இருந்து கன்னியாகுமரி வரையில் 162 நினைவு சின்னங்கள் உள்ளது. இதில் திண்டுக்கல் மலைக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருப்பதாகவும், இதில் பாதுகாக்கப்பட கூடிய நினைவு சின்னங்களாக உள்ளதில் இந்த கொடைக்கானல் மலை பகுதியில் 05 இடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உலக பாரம்பரிய வார விழாவில் இந்த பழமையான சின்னங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இங்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அடுத்த கட்டமாக இவற்றை பாதுகாக்கும் பணியில் தீவிரப்படுத்தி சுற்றுலா இடமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இங்குள்ள கற்திட்டைகள் சுமார் 3000ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும், இது தஞ்சை பெரிய கோவிலை விட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் கட்டிட கலை குறித்து முன் உதாரணமாக அந்த காலத்திலேயே இங்குள்ள கற்திட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் கட்டிட கலை தொடங்கப்பட்டிருக்கலாம் என அவர் மேலும், தெரிவித்துள்ளார்.
மேலும், கீழடியை விட மிகவும் பழமையான ஒரு நினைவு சின்னம் இது என்றும், இது போல கட்டிட கலையை அப்போதே கொண்டுவரப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என இந்திய தொல்லியல் துறையில் திருச்சி தொல்லியல் துணை கண்காணிப்பாளர் முத்துகுமார் தெரிவித்துள்ளார்.
English Summary
Archaeologists examine 3000-year-old prehistoric stone tablets