வாக்காளர் திருத்தப் பணிக்காக ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகம்!
Sir salem Aavin milk packets
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கொல்கத்தா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி (SIR) கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 4-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை விரைவுபடுத்தும் நோக்கில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் SIR பணி நிலவரம்: இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்படி:
தமிழ்நாட்டில் இதுவரை 95.78% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களில் 35.86% மட்டுமே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஆவின் மூலம் விழிப்புணர்வு
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களின் பதிவேற்றத்தை அதிகரிக்கும் நோக்கில், சேலம் மாவட்டத்தில் ஆவின் நிர்வாகம் இந்த நூதன முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
சேலம் ஆவின் பால் பாக்கெட்டுகளில், "தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தக் கணக்கீட்டு படிவத்தினைத் தங்களது வாக்காளர் நிலை அலுவலரிடம் ஒப்படைத்து விட்டீர்களா?" என்ற விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்டு, மக்களிடையே விநியோகிக்கப்படுகிறது. இந்தப் புதிய விழிப்புணர்வு முறை வாக்காளர்கள் தங்கள் பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஊக்கமளிக்கும் என நம்பப்படுகிறது.
English Summary
Sir salem Aavin milk packets