அறியவாய்ப்பு...! தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின்கீழ் பணியாற்ற விருப்பமா..? ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பிக்கலாம்..! விபரங்கள் உள்ளே..!
Applications can be made until August 16 for employment under the Tamil Development and Journalism Department
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தில் பணிபுரிய ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலை 1க்கு , ரூ.15,700-50000 (முந்தைய சம்பள ஏற்ற முறை ரூ.4800-ரூ.10,000 + தர ஊதியம் ரூ.1300) எனும் சம்பளத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளருக்கான அனைத்துப் படிகளுடன் கூடிய அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்றும்;
நிலை – 15, ரூ.36200 – 114800 (முந்தைய சம்பள ஏற்ற முறை ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4500) எனும் சம்பளத்திலமைந்த தொகுப்பாளர் பணியிடம் ஒன்றும் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (SCA-Priority) எனும் இனச் சுழற்சி முறையிலும், தொகுப்பாளர் பணியிடத்திற்கு ‘ஆதிதிராவிடர் முன்னுரிமைப் பெற்றவர்’ (Scheduled Caste – Priority) எனும் இனச் சுழற்சி முறையிலும் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 01.07.2025 அன்றுப்படி, 37 ஆகா இருக்க வேண்டும். தமிழக அரசின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி (VIII Std. Passed) தொகுப்பாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (தமிழில் எம்.ஏ.). அதிகபட்ச வயது வரம்பு 01.07.2025 அன்றுப்படி 37ஆக இருக்க வேண்டும். இந்த பதவிக்கும் தமிழக அரசின் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விருப்பமும், தகுதியும் உடையவர்கள் வெள்ளைத்தாளில் கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படத்தினை ஒட்டி தன்விவரக் குறிப்புடன் பெயர், முகவரி, பிறந்தநாள், மதம், இனம், கல்வித் தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகியவற்றுடன் தேவையான சான்றிதழ்களின் ஒளிப்படிகளைத் தற்சான்றொப்பத்துடன் (Self Attested) இணைத்து 16.08.2025-ஆம் நாள் மாலை 05.30 மணிக்குள் நேரிலோ, பதிவு அஞ்சலிலோ, “இயக்குநர் (முகூபொ), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை – 600 028″ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-29520509 என்னும் தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Applications can be made until August 16 for employment under the Tamil Development and Journalism Department