தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு!
Announcement of Congress protest across Tamil Nadu
தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் 11-ந் தேதி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார், ஆளும் கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதற்காக தேர்தல் ஆணையமும் ராகுல் காந்திக்கு தக்க பதிலடி கொடுத்தது ,ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கண்டனத்தை தெரிவித்தது. மேலும் தேர்தல் ஆணையம் மீது தனது அதிருப்தியை ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார் பாஜகவின் ஒரு அணியாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.மேலும் ஆதாரங்களுடன் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.
இந்தநிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பா.ஜனதா தொடர்ந்து முறைகேடுகளை நிகழ்த்தி வெற்றி பெற்று வருகிறது.
ஆளும் கட்சியாக உள்ள பா.ஜனதா மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் தொடர்ந்து வெற்றி பெறுவதில் மிகப்பெரிய மோசடியை செய்வதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருப்பதால் தான் பா.ஜனதா தொடர்ந்து வெற்றிகளை பெற முடிகிறது.
தலைவர் ராகுல்காந்தி தோலுரித்துக் காட்டிய இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜனதாவுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கட்சிகள் சார்பாக வருகிற 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சிகள் சார்பாக 11-ந் தேதி மாலை 4 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Announcement of Congress protest across Tamil Nadu