ஒடிசா மாநிலத்தின் முதல் பெண் சபாநாயகர் திருமதி.சரளாதேவி அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை, ஒடிசா மாநிலத்தின் முதல் பெண் சபாநாயகர் திருமதி.சரளாதேவி அவர்கள் பிறந்ததினம்!.

 சரளாதேவி (Sarala Devi, ஆகஸ்ட் 9, 1904 – அக்டோபர் 4, 1986) இந்திய சுதந்திர இயக்க ஆர்வலர், பெண்ணிய சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1921ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கம் ஒன்றில் சேர்ந்த முதல் ஒடிசா பெண்மணி ஆவார். சுதந்திர இந்தியாவில் ஒடிசா சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண். ஒடிசா சட்டமன்றத்தி்ன் முதலாவது பெண் பேச்சாளராகவும் கட்டாக்கின் கூட்டுறவு வங்கியின் முதல் பெண் இயக்குநராகவும், உப்கால் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் செனட் உறுப்பினராகவும், இந்திய தேசிய காங்கிரசின் முதல் ஒடிசா பெண் பிரதிநிதியுமாகவும் இருந்தார்.

சரளாதேவி 1904ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று பாலிக்குடாவுக்கு அருகே நாிலோ கிராமத்தில் பிறந்தார். அப்போது வங்காள மாகாணத்தின் ஒரிசா பிாிவு (இப்போது ஒடிசாவில் உள்ள ஜாக்சிங்ஷ்பூர் மாவட்டத்தில்) சமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1917ல் பகவதி மகாபத்ராவை மணந்தாா். 1918 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். மகாத்மா காந்தியின் ஒரிசா முதல் பயணத்தைத் தொடா்ந்து 1921ல் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தார். 1943 முதல் 1946 வரை கட்டாக்கில் உள்ள உட்கால் சாஉறிதி சமாஜின் செயலாளராக பணியாற்றினார். சரளாதேவி 30 புத்தகங்களையும் 300 கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.


சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம்!.

 ஐ.நா.பொதுச்சபை 1994ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு தீர்மானத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதியை உலக பூர்வ குடிமக்கள் (ஆதிவாசிகள்) தினமாக அறிவித்தது. இத்தினம் 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

 உலகமெங்கும் சுமார் 70 நாடுகளில் ஏறக்குறைய ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ஆதிவாசியினர் வாழ்கின்றனர். இவர்கள் சுமார் 4000 மொழிகளை பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.

 பூர்வ குடிமக்களின் கலாச்சாரம் பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றைக் கொடுத்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பை தடுத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is the birthday of the first female speaker of the Odisha Assembly Mrs Saraladevi


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->