திருப்பத்தூர் || பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை - 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!!
4 peoples arrested for love torture to school student in thirupathur
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு படிக்கும்போதே அதேபகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்தார்.
இதனால், மாணவியின் பெற்றோர் தனது உறவினர் வீட்டுக்கு அவரை அனுப்பி வைத்து, அங்கிருந்து பள்ளிக்கு சென்று வருமாறு ஏற்பாடு செய்தனர். அதன் படி அவரும் அங்கிருந்து பள்ளிக்குச் சென்று வந்தார்.

இதையறிந்த பிரசாந்த் மீண்டும் மாணவியிடம் வந்து தன்னை காதலிக்குமாறு கூறி கட்டாயப்படுத்தி தொல்லை கொடுத்துள்ளார். மேலும், பிரசாந்த் தனக்கு உதவியாக மூன்று நண்பர்களையும் அழைத்துச் சென்றிருந்தார்.
அவர்கள், பிரசாந்துக்காக மாணவியிடம் பேசி அவரை காதலிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், மாணவி அதற்கு மறுத்து விட்டார். இந்தச் சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து பெற்றோர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நான்கு பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் ஜோலார்பேட்டையை அடுத்த கோனேரிகுப்பத்தைச் சேர்ந்த முரளியின் மகன் பிரசாந்த் மற்றும் அவரின் மூன்று நண்பர்கள் என்பது தெரிய வந்தது. அதில் பிரசாந்த் என்பவர்தான் மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் பிரசாந்த் உள்பட 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
4 peoples arrested for love torture to school student in thirupathur