இ.பி.எஸ்.க்கு வயிற்றெரிச்சல்..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார்!
E P S has stomach pain Chief Minister MK Stalin says
மத்திய அரசே சாதிக்க முடியாததை மு.க.ஸ்டாலின் சாதிக்கிறாரே என இ.பி.எஸ்.க்கு வயிற்றெரிச்சல் ஏற்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பல்லாவரத்தில் அரசு விழாவில் பல்வேறு திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-கல்வியும் மருத்துவமும் தான் நமது திராவிட மாடல் அரசின் இரு கண்களாக உள்ளன.தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய கல்விக்கொள்கையை நேற்று வெளியிட்டேன் என கூறினார் .
மேலும் விழாவில் தொடர்ந்து பேசிய அவர்,காலுக்கு கீழ் கொஞ்சம் நிலமும், தலைக்கு மேல் கூரையும் இன்றும் பலருக்கு கனவாகவே உள்ளது. மனிதனின் அடிப்படை தேவையான உடை, உணவு எளிதாக கிடைத்தாலும் இருப்பிடம் கிடைப்பதில்லை.
கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 17.74 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளோம்.
5 மாதங்களில் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டாக்கள் வழங்கப்பட்டன என பேசினார்.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ரூ.1,672 கோடி மதிப்பீட்டில் வீட்டு மனை பட்டாக்களை தற்போது வழங்கி உள்ளேன் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் ஆட்சிக்கு பின் தற்போது இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளோம் என பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் இந்த வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் புள்ளி விவரத்தை தவறு என்கிறார். மத்திய அரசே சாதிக்க முடியாததை மு.க.ஸ்டாலின் சாதிக்கிறாரே என்ற வயிற்றெரிச்சலில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பிப் பார்த்து இதுதான் வளர்ச்சி என்று சொல்வது போல் செயல்படுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
English Summary
E P S has stomach pain Chief Minister MK Stalin says