தமிழகத்தில் 110 புதிய சொகுசு பேருந்துகள் - தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!
110 new bus buy in tamilnadu
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 1,080க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அரசு போக்குவரத்து கழங்களுக்கு 4,300 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.

இந்த புதிய பேருந்துகள் மூன்று கட்டமாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். முதல்கட்டமாக 1,500க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஏற்கெனவே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அடுத்தடுத்து புதிய பேருந்துகளை இயக்க உள்ளோம்.
அதன் படி தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகத்தில் இன்னும் 10 நாளில் 10 ஏசி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல் படுக்கை, இருக்கை வசதியுடன்கூடிய 110 புதிய சொகுசு பேருந்துகள் வாங்க டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது. இந்த பேருந்துகள் பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
110 new bus buy in tamilnadu