சட்டவிரோதச் செயல், மிரட்டல் மற்றும் வன்முறை என்பன திமுகவால் நிகழ்த்தப்பட்ட அரசியல் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு: அண்ணாமலை சாடல். - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் காளிமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் காளிமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த அரசு ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதற்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

'அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது என்பது, நிர்வாகத்தின் தோல்வி மட்டும் அல்ல. மக்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட அமைப்பின் மீதான நம்பிக்கை சீர்குலைவு ஆகும்.

புவனகிரியில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக, அரசு அதிகாரி ஒருவரை, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கடுமையாக தாக்கியதுடன்,  ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். தாக்குதலுக்கு பிறகு மிரட்டியும் சென்றுள்ளார்.

இது கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த சட்ட விரோதமான ஒரு சம்பவம் மட்டும் அல்ல. மிரட்டல், வன்முறை மற்றும் பொது அமைப்புகளை புறக்கணிப்பதை இயல்பாக்கும் வகையில் திமுக உருவாக்கிய அரசியல் கலாசாரத்தின் பிரதிபலிப்பு ஆகும்.' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai says intimidation and violence are a reflection of the political culture perpetrated by the DMK


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->