அண்ணாமலைக்கு எதிராக அம்பேத்கரின் பிறந்தநாளில் நடைபயணம் - காயத்ரி ரகுராம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக நிர்வாகியாக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் கட்சியின் பெயருக்கு கலக்கம் விளைவிக்கும் வகையில் நடந்ததால், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வந்த காயத்ரி ரகுராம், அண்ணாமலையால் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை நிலவுவதாக குற்றம் சாட்டினார். 

இதுகுறித்த அவரின் ஒரு பதிவில், "எனது எட்டு வருட உழைப்பை சுரண்டி கொண்டு என் பெண்மையை அவமானப்படுத்தி, என் பணத்தை உழைப்பை சுரண்டிக்கொண்டு என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்கு நன்றி. களத்தில் சந்திப்போம்." என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலைக்கு எதிராக அம்பேத்கரின் பிறந்தநாளில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.

மேலும், அனைத்துப் பெண்களுக்காகவே நடைபயணம் மேற்கொள்கிறேன் என்றும், ஊழலுக்காகவே நடைபயணம் அண்ணாமலை மேற்கொள்கிறார் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் ஊழல் குறித்து தமிழக மக்களிடம் அம்பலப்படுத்த அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai BJP Gayathri Raghuram 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->