ரயிலில் வழங்கப்படும் உணவு டிரே கழுவி கிளீன் மீண்டும் யூஸ்! அம்ரித் பாரத் ரயிலில் என்னங்க நடக்கது– சுகாதார குற்றச்சாட்டுக்கு ரயில்வே விளக்கம்! - Seithipunal
Seithipunal


ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் தரம் குறித்து பயணிகள் அடிக்கடி குற்றச்சாட்டு வெளியிடுவது புதியதல்ல. ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ, ரயில் பயணிகளை அதிர்ச்சியடையச் செய்தது. அதில், ரயில்வே ஊழியர்கள் உணவு வழங்கப் பயன்படுத்தப்படும் சில்வர் நிறத்திலான டிரேக்களை, ரயிலுக்குள் உள்ள தண்ணீர் டேப்பில் கழுவி வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் (Amrit Bharat Express – ரயில் எண் 16601) ரயிலில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பயணிகளிடையே பெரும் எதிரொலியை ஏற்படுத்தியது.

நெட்டிசன்கள் பலர், “இந்த டிரேக்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் யூஸ்-அண்ட்-த்ரோ வகை அல்லவா? இதை மீண்டும் சுத்தம் செய்து பயன்படுத்துகிறார்களா?” எனக் கேள்வி எழுப்பினர். “சுகாதார விதிமுறைகள் எங்கே போனது?” எனக் கடும் விமர்சனங்களும் எழுந்தன.

இதனால், ரயில்வே அமைச்சகத்தை டேக் செய்து பலரும் புகார் பதிவிட்டனர். இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

அதன் முடிவில், ரயில்வே விளக்கம் அளித்தது:“உணவு பரிமாறப் பயன்படுத்தப்படும் கேசரோல்கள் (டிரேக்கள்) ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதற்காக சுத்தம் செய்யப்பட்டவை மட்டுமே. அவை மீண்டும் உணவு வழங்கப் பயன்படுத்தப்படவில்லை. ரயில்வே கேட்டரிங் சேவைகளின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரவிய இந்த தகவல் தவறானது,” என தெரிவித்துள்ளது.

மேலும், உணவு விற்பனை செய்பவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் எழுத்துப்பூர்வ விளக்கமும் பெறப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கூறியுள்ளது.

“பயணிகள் சேவையில் சுகாதாரம் மற்றும் தரம் குறித்த நெறிமுறைகளை கடுமையாகக் கடைபிடிக்கிறோம். அப்புறப்படுத்துவதற்கு முன் டிரேக்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன; மீண்டும் பயன்படுத்தப்படவில்லை” என்றும் ரயில்வே உறுதியளித்துள்ளது.

இது தொடர்பான வீடியோ வைரலாகியபோதிலும், அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியானதால் தற்போது நிலைமை தெளிவடைந்துள்ளது. அதேசமயம், பயணிகள் உணவு தரம் குறித்த புகார்கள் தொடர்ந்து வருவதால், ரயில்வே கேட்டரிங் சேவையில் சுகாதார கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wash and reuse the food trays served on trains! What happening on Amrit Bharat train Railways explains health allegations


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->