பலத்த சூறைக்காற்று வீசக்கூடும்.. அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
arabi sea rain alert
அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் தற்போது நிலைத்து இருக்கும் இந்த மண்டலம் மெதுவாக வலுப்பெற்று வருவதாகவும், அடுத்தடுத்த நாள்களில் இது புயலாக மாறுமா என்பது அதற்கான நகர்வுகள் மற்றும் காற்றின் திசை மாற்றத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என்றும் வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அரபி கடலில்
இதன் தாக்கமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் கனமழை பெய்யலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் தென் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், கடலில் பயணிக்கும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக். 21-ஆம் தேதிக்குள் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்பி விட வேண்டும் என்றும், புதிய மீன்பிடித் திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவது அவசியம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, மாநில அரசும் கடலோர மாவட்ட நிர்வாகங்களும் மீனவ கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.