அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: இன்று தீர்ப்பு!
Anna University student sexual case Verdict today
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு சென்னை மகளிர் கோர்ட்டு நீதிபதி பிறப்பிக்க உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவியை நபர் ஒருவர் மிரட்டி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகர் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து கோர்ட்டு பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர். அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. அப்போது, ஞானசேகரனுக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை.கடந்த ஏப்ரல் 23-ந்தேதி சாட்சி விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குவதாக நீதிபதி ராஜலட்சுமி கடந்த வாரம் உத்தரவிட்டார்.அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிறப்பிக்க உள்ளார்.
English Summary
Anna University student sexual case Verdict today