அண்ணா பல்கலை, மாணவி வழக்கு! திமுக அனுதாபி ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!
Anna University Harassment case judgement
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மாணவி ஒருவரிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஞானசேகரன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஞானசேகரன் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. லட்சுமிநாராயணன், விசாரணையை ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஒப்படைத்தனர்.
அவர்களது விசாரணை முடிவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, மார்ச் மாதத்தில் சென்னையின் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
ஏப்ரல் 23 முதல் தினசரி விசாரணை நடைபெற்றதில் பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்து தரப்புகளின் வாதங்கள் முடிந்த நிலையில், மே 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று, போலீஸ் பாதுகாப்புடன் ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார்.
நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரனை குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கி, வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தண்டனை விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
English Summary
Anna University Harassment case judgement