வினாத்தாள் கசிவு: அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுவைப்பு! - Seithipunal
Seithipunal


முன்கூட்டியே வினாத்தாள் பிரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் நடைபெற இருந்த பிஇ இரண்டாம் ஆண்டு சுற்றுச்சூழல் அறிவியல் பாடத் தேர்வு, ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதியம் நடைபெற வேண்டிய தேர்வுக்கான வினாத்தாள் ஒரு கல்லூரியில் காலையிலேயே திறக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது. 

மேலும் இந்த வினாத்தாள் அந்த கல்லூரி மாணவர்கள் இடையே கசிந்து உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் இந்த வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது.

எனவே தேர்வினை உடனடியாக அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தேர்வினை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட இந்த பிஇ இரண்டாம் ஆண்டு சுற்றுச்சூழல் அறிவியல் பாடத் தேர்வு, ஜூலை 31ஆம் தேதி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna University BE Exam paper leak 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->