ஆத்திரம் கண்ணை மறைத்த விபரீதம்...! மனைவியை கத்தியால் பதம் பார்த்த கணவரை கம்பி எண்ண வைத்த காவலாளர்கள்...!
Anger blinded eyes guards made husband count number bullets after he saw his wife stab him Send feedback Translation results available
தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் குடும்பத் தகராறு விபரீதமாக மாறியதில், மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி (35), தனது முதல் மனைவியுடன் பிரிந்த பின்னர் கார்த்திகா (28) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார்.

குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.இந்த நிலையில், நேற்று மீண்டும் இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுடலைமணி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கார்த்திகாவை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கார்த்திகாவை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கார்த்திகா அளித்த புகாரின் அடிப்படையில் தாளமுத்து நகர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சுடலைமணியை கைது செய்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Anger blinded eyes guards made husband count number bullets after he saw his wife stab him Send feedback Translation results available