படிப்பிற்கு வயது முதிர்வு தடங்கல் இல்லை: 70 வயதில் 10-ஆம் பகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற முதியவர்..! - Seithipunal
Seithipunal


70 வயது முதியவர் ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று கல்வி கற்க வயது தடையில்லை என நிரூபித்துள்ளார். சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன் வயது 70.  இவர் இதே கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 1965-ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

அதன் பின்னர் சிதம்பரத்தில் உள்ள ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்திருந்தார். அவருடைய தந்தை மற்றும் தாய் இறந்துவிட படிப்பை தொடர முடியாமல் நிறுத்தியுள்ளார். பின்னர், தாத்தா மற்றும் பாட்டி வீட்டில் இருந்து படித்து வந்து அவருக்கு, ஒரு கட்டத்தில் பள்ளிக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாள், அவரது தாய் மாமன் ராஜகோபால் வேலைபார்த்த ரயில்வே துறையில் ஒப்பந்த ஊதிய அடிப்படையில் கேங்மேன் பணியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

பின்னர் 1980-இ ல் ரயில்வே துறையில் பணி நியமன ஆணையை பெற்று, தொடர்ந்து, 30 ஆண்டுகளாக பணி செய்து வந்துள்ளார்.

பணி ஓய்வுக்கு பின் கடலூரில் 2002-ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு தேர்வை முடித்த பின்னர் 2024-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு ஆண்டு தேர்வு எழுதி இருந்தார். அதில், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்ற அவர் மூன்று பாட பிரிவில் தோல்வியடைந்தார். பின்னர் தமிழ் மற்றும் கணிதத்தில் தேர்ச்சி அடைந்தாலும், ஆங்கிலத்தில் தோல்வி அடைந்ததால் மீண்டும் படிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அவர் சிதம்பரம் நந்தனார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். தமது வெற்றி குறித்து முதியவர் கோதண்டராமன் கூறியதாவது;

'படிப்பிற்கு வயது முதிர்வு தடங்கல் இல்லை. என்னை பார்த்து மற்ற மாணவர்கள் தேர்வு எழுத போட்டி போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டினர். வெற்றிக்கு எனது மகன் தான் காரணம்.' என்று நெகிழ்ச்சியக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An elderly man who passed the 10th standard examination at the age of 70


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->