கொந்தளித்த நீதிபதி... என்ன அவசரம்? என கேள்வி! - மனுவை மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் - Seithipunal
Seithipunal


சிவகங்கை காவலாளி அஜித்குமார் lock up கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த சூழலில், த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி,ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம்? எனவும் நீதிபதி வேல்முருகன் வினவியுள்ளார்.

மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும். கூடுதலாக, ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An angry judge asked what the hurry was Madras High Court rejected petition


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->