எச்சரிக்கை விடுத்த ஐகோர்ட்! சிபிசிஐடிக்கு பொன்முடி மீதான வழக்குகள் மாற்றப்படும்...! - Seithipunal
Seithipunal


முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி அவர்கள்,பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும் மக்கள் எதிர்க்கும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.இதில்,முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அவருக்கு எதிராக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக்காட்டி, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

அவ்வகையில், பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.அச்சமயம், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பொன்முடியின் பேச்சு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நேரத்தில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அதன் பின்னர்,பொன்முடிக்கு எதிராக 3 காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தியதில், அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்பில் வராது எனத் தெரிவித்து, அந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.பின்னர்,தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை தான் பொன்முடி குறிப்பிட்டு பேசினார் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.இதையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு எதிரான புகார்கள் மீது காவல் துறையினர், புலன் விசாரணை செய்ய தயங்கினால், விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என எச்சரித்த நீதிபதி, பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோல பேச வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.

அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். கருத்து சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நல்ல விஷயங்களை சொல்லியிருக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 8-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

HIGH COURT issues warning Cases against Ponmudi case transferred to CBCID


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->