கடலில் தவறி விழுந்து மீனவர் பலி: விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த துயர சம்பவம் எதிரொலியாக விசைப்படகுகள்  கடலுக்கு செல்லவில்லை.  

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் பேதுரு மகன் பிலவேந்திரன் (56). மீனவரான  விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 பேருடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளார்.  கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, திடீரென பிலவேந்திரன் கடலுக்குள் தவறி விழுந்துவிட்டாராம்.

இதையடுத்து சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தருவைகுளம் மரைன் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ரெனிஸ் வழக்கு பதிவு செய்தார். 

இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து விசாரணை நடத்தி வருகிறார். மீனவர் உயிரிழந்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இன்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 272 விசைப்படைகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fisherman drowned in the sea Fishing boats did not go out to catch fish


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->