தயவு செய்து please take a call...! எப்படி நா கூசாமல் பரந்தூர் விமானம் குறித்து இப்படி...? - விஜய்
please take a call How can I not be so angry about Paranthur flight Vijay
சென்னை பனையூரிலுள்ள தலைமைக் கழகத்தில் இன்று கட்சி தலைவர் ''விஜய்'' தலைமையில் த.வெ.க. செயற்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்ததாவது,"பரந்தூர் விமான நிலையம் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்துவிட்டு புது விமான நிலையம் எதிர்த்து அப்பகுதி மக்களும், விவசாயிகளும் வருடக்கணக்காக போராடி வருகிறார்கள்.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் த.வெ.க. சார்பாக நான் சென்று பார்த்தேன்.

அதற்கு அடுத்த நாளே மக்கள் பாதிக்காத வகையில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று உங்கள் அரசு சார்பாக விளக்க அறிக்கை வந்தது.அந்த அறிக்கையில், 1500 குடும்பங்கள் மட்டுமே பரந்தூரில் வசிப்பதால் விமான நிலையம் வந்தால் பெரிய பாதிப்பு இருக்காது என்று சொல்லி இருந்தார்கள்.மக்கள் பாதிக்காத வண்ணம் என்றால் என்ன என்னங்க சார்?ஒன்று அந்த இடத்தில் விமான நிலையம் வருகிறது என்று சொல்லணும்.
இல்லைனா அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்று சொல்லணும்.இரண்டுமே அந்த அறிக்கையில் இல்லை.வெறும் 1500 குடும்பங்கள் என்று சொன்னால் அவ்வளவு சாதாரணமாக போய்விட்டதா CM சார்.15 ஆயிரம் மக்கள். அந்த மக்களும் நம்ம மக்கள் தானே.ஏன் அந்த அக்கறையோ, அந்த மனிதாபிமானமோ உங்களிடம் இல்லை.எதிர்க்கட்சியாக இருந்தால் தான் மக்கள் மீது அக்கறை இருக்குமா?100-க்கணக்கான விவசாய நிலங்களை, மிகப்பெரிய நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான வீடுகளை அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து விமான நிலையம் கட்டியே ஆக வேண்டும் என்று என்ன சார் இருக்கு.அப்புறம் எப்படி சார் மக்களின் முதல்வர் என நா கூசாமல் பேசுகிறீர்கள்.இதுல வேற பரந்தூர் விமான நிலையத்திற்கும் உங்களுக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி காட்டிக்கொள்கிறீர்கள்.
ஆனா விமான நிலையத்துக்காக பரந்தூரை பரிந்துரை செய்தது உங்கள் அரசு தான் என்று ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் சென்னை வந்தபோது சொன்னார். அதற்கும் உங்களிடம் இருந்து பதில் இல்லை.இந்த சூழ்நிலையில் பரந்தூர் விமான நிலைய பணிகளுக்காக கடந்த விவசாய நிலங்களை கையப்படுத்த கடந்த 25.6.2025 அன்று உங்கள் அரசுதான் அரசாணை பிறப்பித்துள்ளது.விமான நிலையம் அமைப்பதையே ஏற்க மாட்டோம் என்று வருஷக்கணக்காக மக்களின் நிலங்களையும் சேர்த்தே கையகப்படுத்த அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டிய தமிழ்நாடு அரசு அவர்களின் கண்களில் குத்துவதுபோல் உள்ளது இந்த GO.இதெல்லாம் உங்களுக்கு தெரிந்துதான் நடக்கிறதா? உங்களின் ஒப்புதலோடுதான் நடக்குதா? தெரியவில்லை. பதிலும் தெரியவில்லை.பரந்தூர் மக்களை ஏன் இன்னும் சந்திக்கவில்லை என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.பரந்தூர் மக்களை சமீபத்தில் நான் சந்தித்தேன். அவர்கள் சொன்னதை கேட்டு மிகவும் கஷ்டமாக இருந்தது.
இப்பவும் எதுவும் குறைந்துவிடவில்லை CM சார்.சாதி, மதம் கடந்து, தங்கள் குடியிருப்புகளை, விவசாய பூமியை, வாழ்வாதாரத்தை, நீர் நிலைகளை காப்பாற்ற ஒன்றாக நின்று போராடிக்கொண்டிருக்கும் பரந்தூர் மக்களை நீங்கள் சந்தித்து பேசுங்கள்.உங்களுடைய அமைச்சர்களோ, அதிகாரிகளோ சந்தித்து பேசக்கூடாது. நீங்களே நேரில் சந்தித்து பேச வேண்டும். அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை நீங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இதையெல்லாம் நீங்கள் செய்யாமல் கடந்து போக வேண்டும் என்று நினைத்தால், பரந்தூர் மக்களையும் விவசாயிகளையும் அழைத்து வந்து தலைமை செயலகத்தில் உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமை உண்டாகும்.அதுபோன்ற சூழலை நீங்கள் உருவாக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை அதுபோன்ற ஒரு சூழல் வந்தால் நான் அதை எதிர்க்கொள்ள தயாராக இருக்கிறேன்.பரந்தூரை தேர்ந்தெடுத்தது தான் தவறு என்கிறோம்.
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. விமான பாதுகாப்பு நிபுணர்கள் (Aviation Safety Experts) உறுதி செய்துள்ளனர்.நீர்நிலைகளை அழித்து விமான நிலையம் வந்த பிறகு, மழைக்காலத்தில், வெள்ளம் ஏற்பட்டால் மொத்த சென்னையும் வெள்ளக்காடாகும். இதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதையெல்லாம் மனதில் வைத்து, தயவுசெய்து please take a கால்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
please take a call How can I not be so angry about Paranthur flight Vijay