கோடை விடுமுறை.. ஆம்னி பேருந்துகளில் அதிரடியாக உயர்ந்த கட்டணம்.!! - Seithipunal
Seithipunal


வெளியூர்களுக்கு பயணம் செய்ய விரும்புவோர் ரெயில் சேவையை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதற்கு அடுத்தபடியாக அரசு பேருந்துகளை நாடுகின்றனர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள் கடைசி பயணமாக தனியார் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் படி இன்று சென்னையில் இருந்து நாகர்கோவில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு ஆம்னி பஸ்களில் ரூ.200 முதல் ரூ.500 வரை கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

இதேபோல், நாளை மேலே குறிப்பிட்டுள்ள ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர ரூ.500 முதல் ரூ.700 வரை கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதனால், பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

amni bus ticket price increase for summar holiday


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->