கட்டுக்குள் வருமா.? ஆம்னி பஸ்ஸின் அட்ராசிட்டி..! எமனாக வலம் வரும் ஆம்னி பஸ்கள்.!  - Seithipunal
Seithipunal


கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து எஸ்ஆர்எஸ் ஆம்னி பஸ் திருப்பூருக்கு சென்றது. இதனை நாகர்கோவிலைச் சேர்ந்த சத்திய பாபு என்பவர் ஓட்டினார். நள்ளிரவு நேரத்தில் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை தாண்டி பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது சத்யராஜ் பாபு சற்று கண் அசந்ததால் பேருந்து தறிகெட்டு ஓடி சாலையோரம் இருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதன்காரணமாக பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பின்னர் முன்பக்க கண்ணாடியை உடைத்து பயணிகள் மீட்கப்பட்ட நிலையில், ஓட்டுநருக்கு கண்ணாடி வெட்டி காயம் ஏற்பட்டது. பின்னர் காயமடைந்த பயணிகள் மற்றும் ஓட்டுனர் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஓட்டுநர் கடந்த 10 தினங்களாக சபரிமலைக்கு சுற்றுலா பேருந்து ஓட்டிவிட்டு ஓய்வே இல்லாமல் உடனடியாக பணிக்கு திரும்பியது தான் இந்த விபத்திற்கு காரணம் என்று பயணிகள் தெரிவித்தனர். ஆனால், ஒரு நாள் ஓய்வுக்குப் பின்னர் தான், நான் வாகனத்தை இயக்கினேன் என்று சத்யராஜ் பாபு தெரிவித்தார். 

Image result for omni bus seithipunal

ஆம்னி பேருந்துகள் பலவும் லாபம் சந்திக்க வேண்டும் என்பதற்காக, ஓட்டுநர்களுக்கு போதிய ஓய்வு இல்லாமல் பணி செய்ய நிர்பந்திக்கும் நிகழ்வு ஏற்படுவதால்தான் இது போன்ற விபத்துகள் ஏற்படுகின்றது. பல இடங்களில் வேகமாக செல்கிறேன் என்ற பெயரில் தாறுமாறாக பேருந்தை ஓட்டி, எதிரில் வருபவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த ஆம்னி பஸ்களில் அட்டகாசம் கட்டுக்குள் வர அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்பது அனைவரின் கேள்விக்குறியாக இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amni bus atrocity


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal