அம்மா சிமெண்ட் விலை உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு.!
Amma Cement Price Increased 12 December 2020
தமிழகத்தில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகட்ட உதவி செய்யும் பொருட்டு பசுமை வீடு என்ற சிறப்பு திட்டமானது அமல்படுத்தப்பட்டது. இதன் மூலமாக பல இலட்சக்கணக்கான மக்கள் தங்களுக்கென அழகிய வீட்டினை கட்டி பயன் பெற்றனர்.
கட்டுமான பணிகளுக்கு தேவையான கம்பி, சிமெண்ட் போன்ற பொருட்களும் மலிவான விலையில் வழங்கப்பட்டது. கட்டுமான பணிகளில் பிரதான இடத்தை பெற்ற சிமெண்ட் விலையானது தொடர்ந்து உயர்ந்துகொண்டே சென்ற நிலையில், அரசு சார்பாக சிமெண்ட் வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, " அம்மா சிமெண்ட் " என்ற பெயரில், குறைந்த விலையில் ரூ.190 க்கு சிமெண்ட் மூட்டையை வழங்கினார். இந்த சிமென்டின் விலை ஏழை, எளிய மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
இந்நிலையில், கடந்த 5 வருடமாக அம்மா சிமெண்ட் ரூ.190 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இதன் விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அம்மா சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.218 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Amma Cement Price Increased 12 December 2020