விவேக்கின் மறைவு - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி 4.30 மணி அளவில் உயிரிழந்தார்.

நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நண்பர்கள், திரைத்துறையினர், பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

விவேக்கின் கலை மற்றும் சேவையை போற்றும் விதமாக காவல் துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், " நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றேன். அவரது நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியது. தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல். ஓம்சாந்தி " என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amith Shah Tamil Tweet about Actor Vivek Passed Away 17 April 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->