மீண்டும் தமிழகம் வருகிறார் அமித் ஷா!
Amit Shah tamilnadu july visit
மதுரை சிந்தாமணியில் உள்ள ஓட்டலில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் பங்கேற்றார். அதிமுக-பாஜக கூட்டணி அமைந்த பிறகு தமிழகம் வந்த முதலாவது முறை என்பதால், இந்த கூட்டத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, டாக்டர் தமிழிசை, வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்ட 22 பேர் பங்கேற்ற இந்த கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் பகுதிகளில் நிலவும் அரசுக்கு எதிரான மனப்பாங்கு, கூட்டணியின் நிலை மற்றும் எதிர்பார்ப்புகளை விவரித்தனர். அமித் ஷா அனைத்தையும் கவனமாகக் கேட்டு, “தமிழகத்தில் தற்போது சாதகமான சூழல் நிலவுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகிறது.
இதை மக்களுக்கு சென்று சொல்லுங்கள். பூத் நிலை முதல் செயல்பாடுகள் தொடங்க வேண்டும். தேர்தலுக்கு 10 மாதமே உள்ளது. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இந்தியா கூட்டணியை தமிழ்நாட்டிலும் தோற்கடிக்க வேண்டும்,” என உறுதியாகக் கூறினார்.
மேலும், “ஜூலை மாதம் மீண்டும் தமிழகம் வருகிறேன்” எனவும் தெரிவித்தார்.
English Summary
Amit Shah tamilnadu july visit