மக்களவையில் ரெயில்வே லெவல் கிராசிங் விபத்து குறித்து கேள்வி!- பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ்
Question regarding railway level crossing accident in Lok Sabha Ashwini Vaishnav responds
கடந்த 8-ந் தேதி, கடலூர் மாவட்டத்தில் ரெயில்வே கேட்டை( level crossing ) கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரெயில் மோதியது. இந்த விபத்து குறித்து நேற்று பாராளுமன்ற மக்களவையில் கேள்வி முன் வைக்கப்பட்டது.

அஸ்வினி வைஷ்ணவ்:
இதற்கு பதிலளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தெரிவித்ததாவது,"கடந்த மூன்றரை ஆண்டுகளில், 3 லெவல் கிராசிங்( level crossing ) விபத்துகள் நடந்துள்ளன.இதில் கடலூர் லெவல் கிராசிங் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தார்கள்,மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பலியானோர் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மொத்தம் ரூ.11 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி,தமிழ்நாட்டில், இதுவரை 1,053 லெவல் கிராசிங்குகளில், 'இன்டர்லாக்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளன.
இன்னும் 72 லெவல் கிராசிங்குகளில் இன்டர்லாக்கிங் பணி நடந்து வருகிறது. இந்த வசதி இருந்தால், லெவல் கிராசிங் கதவு மூடப்பட்டு இருந்தால் மட்டுமே ரெயில் செல்ல அனுமதி கிடைக்கும்.மேலும், தமிழ்நாட்டில், லெவல் கிராசிங்குகளை ஒழிக்கும் நோக்கத்தில், 235 ரெயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடலூர் மாவட்டத்திலுள்ள 92 லெவல் கிராசிங்குகளில், 11 லெவல் கிராசிங்குகளில் ரெயில்வே மேம்பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,தமிழ்நாடு அரசு சம்மதம் தெரிவிக்காததால், 7 மேம்பால பணிகளை தொடங்க முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.இது மக்களவையில் பல்வேறு விமர்சனங்களை பெற்று வந்தகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Question regarding railway level crossing accident in Lok Sabha Ashwini Vaishnav responds