ஆட்டோ கட்டண உயர்வு நாளை முதல் அமல்!
Auto fare increase will be effective from tomorrow
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 20 சதவீதம் வரை ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.இந்த ஆட்டோ கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
உலகின் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.அதுமட்டுமல்லாமல் தொழில் நகரமாக விளங்கும் இங்கு 2025-ம் ஆண்டு மே மாதம் நிலவரப்படி 3 லட்சத்து 60 ஆயிரத்து 899 ஆட்டோக்கள் ஓடுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆட்டோ கட்டணமாக முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், அதன்பிறகு கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15 அடிப்படை கட்டணமாக அமலில் உள்ளது.
இந்த நிலையில் ஆட்டோ டிரைவர்கள், கட்டணத்தை உயர்த்த கோரி தொடர்ந்து கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையத்து ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கையை ஏற்று கட்டணத்தை உயர்த்த அரசு பெங்களூருவில் குறைந்த பட்ச ஆட்டோ கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.36 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 20 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வுக்கு ஆட்டோ டிரைவர்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.20 கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.40 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும்,டிரைவர்கள் கூறி வருகிறார்கள்.
மேலும் கட்டண உயர்வுக்கு எதிராக நாளை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது கோரிக்கையை அரசு ஏற்கும் வரை மீட்டர்களை பொருத்தாமல் ஆட்டோக்கள் இயக்குவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
English Summary
Auto fare increase will be effective from tomorrow