பெண்ணுக்கு புதிய ரத்த வகை..மருத்துவத் துறையில் அபூர்வமான கண்டுபிடிப்பு!
New blood type for women A rare discovery in the medical field
கர்நாடக பெண்ணுக்கு உலகிலேயே புதிய வகை ரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருத்துவ அதிசயம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணின் ரத்த பரிசோதனையில் உலகில் இதுவரை யாருக்கும் இல்லாத புதிய ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது.
எப்படி கண்டறியப்பட்டது?பெண் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது ரத்த பரிசோதனையில் O RH Positive வகை என தெரியவந்தது.
ஆனால், சிவப்பு இரத்த அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருப்பது (Pan-reactive RBC) என்ற அபூர்வ தன்மை தெரியவந்தது.இதையடுத்து சர்வதேச சோதனைநடத்தப்பட்டது .ரத்த மாதிரி பெங்களூருவில் உள்ள TTK Immunohematology Reference Centreக்கு அனுப்பப்பட்டது.அங்கு பரிசோதித்தபோது உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர், இங்கிலாந்தில் உள்ள **International Blood Group Reference Centre (IBGRL)**க்கு மாதிரி அனுப்பப்பட்டது.10 மாதங்களாக நடந்த சோதனை முடிவில், உலகில் யாருக்கும் இல்லாத புதிய ரத்த வகை என அறிவிக்கப்பட்டது.
புதிய ரத்த வகை பெயர்:புதிய ரத்த வகைக்கு CRIP (Comer India Bengaluru) என பெயரிடப்பட்டுள்ளது.இந்த ரத்த வகை கொண்ட உலகின் முதல் நபர் இந்த கோலார் பெண் தான் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏன் இது முக்கியம்?மருத்துவத் துறையில் மிகவும் அபூர்வமான கண்டுபிடிப்பாகும்.இந்த வகை ரத்தம் கொண்டவர்கள், தங்களுக்கு இணையான ரத்தத்தையே பெற முடியும் என்பதால், ரத்த வங்கி பதிவேடு முக்கியமானது.எதிர்காலத்தில் இதுபோன்ற ரத்த வகை கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை முறைகளில் உதவியாக இருக்கும்.
English Summary
New blood type for women A rare discovery in the medical field