மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்.!
All Saturday working day school in tamilnadu
தமிழகத்தில் கடந்த ஜூன் 7ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் வரும் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி சீரமைப்பு உள்ளிட்ட மாணவர்களுக்கான தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளை திறக்க தாமதம் ஏற்படதால் ஒரு படத்திற்கு 4 மணிநேர பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு பாடச் சுமை இல்லாதவாறு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும். போட்டி குறித்த முறையான தகவல் வரவில்லை என்றும் 9க்கும் மேற்பட்ட மாநிலங்கள் போட்டியில் பங்கேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்
English Summary
All Saturday working day school in tamilnadu