பிரதமர் மோடி தூத்துக்குடி வருகை: உச்சகட்ட பாதுகாப்பில் விமான நிலையம்: 02 ஆயிரம் போலீஸார் குவிப்பு..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ.452 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 26) திறந்து வைக்கவுள்ளார். இதையொட்டி, சுமார் 02 ஆயிரம் போலீஸார் 05 அடுக்கு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக மாலத்தீவில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் இரவு 07.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பிரதமர் வருகிறார். அவருக்கு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்த பின்னர், விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, தமிழகத்தில் ரயில்வே துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,032 கோடி மதிப்பிலான பணிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,557 கோடி மதிப்பிலான பணிகளை திறந்து வைக்கவுள்ளார்.

அடுத்ததாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.548 கோடியில் 03 மற்றும் 04-வது உலையில் இருந்து மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார். 

சுமார் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைத்துப்பேசவுள்ளார். இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். விழா முடிந்த பிறகு இரவு 09.30 மணிக்கு தனி விமானம் மூலம் பிரதமர் திருச்சிக்கு புறப்படவுள்ளார்.

பிரதமரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், விமான நிலைய வளாகம் முழுவதும் சிறப்பு பாதுகாப்புப் பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

அத்துடன், தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, 03 ஆய்வாளர்கள் மற்றும் 75 போலீஸார் 24 மணி நேரமும் படகில் ரோந்து சென்று, கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். ட்ரோன்கள் மூலம் கண்காணி க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்புக் குழும டி.ஐ.ஜி மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Airport under high security ahead of PM Modi visit to Thoothukudi


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->