அதிமுகவின் முக்கிய வழக்கு! இரண்டே நாளில் தீர்ப்பு! தொடங்கியது விசாரணை! அனல் பறக்கும் ஓபிஎஸ் வாதம்!
AIADMK Case OPS Side Chennai HC march 11am
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு, சற்று முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்களும் இந்த வழக்கோடு சேர்த்து விசாரணை செய்யப்பட்ட வருகின்றன.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஒரு பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அதிமுக பொது குழு செல்லும். பொதுக்குழு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உரிமையியல் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஓபன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று சிறப்பு அவசர வழக்காக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் வருகின்ற 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
அதன் காரணமாக வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் அனல் பறக்க தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
ஓ பன்னீர்செல்வம் தரப்பில், இரட்டை தலைமையின் ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்கள் ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவில் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரை உள்ளது. இன்னும் காலாவதி ஆகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியிலிருந்து பன்னீர்செல்வத்தை நீக்கியும், பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வரவும் ஜூலை 11 பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும் என்ற, பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக எம்ஜிஆர் வகுத்து தந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தங்களது வாதத்தை முன் வைத்துள்ளது.
மேலும் 2021 இல் ஒருங்கிணைப்பாளர் அடிப்படை உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்து, தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது இந்த பதவி வருகின்ற 2026 வரை உள்ளது" என்று ஓபிஎஸ் தரப்பு தனது வாதத்தை முன்வைத்து வருகிறது.
English Summary
AIADMK Case OPS Side Chennai HC march 11am