அதிமுக பொதுக்குழு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


ஜூன் 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்தும், புதிய முடிவுகளை எடுக்க தடைகோரியும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், ஜூன் 23 பொதுக்குழுக் கூட்டத்துக்கு அடுத்தப் பிறகு ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. 

புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டதால்  முதல் பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிரான மனுவை நிலுவையில் வைக்க வேண்டிய தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

மேலும், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலும் சில செய்தி துளிகள் :

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் வரும் 9ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "ஐடி விங் உறுப்பினர்கள் யாரைக் கண்டும் பயப்பட வேண்டாம். உங்களுக்கு நான் இருக்கேன். எனது நேரடி கட்டுப்பாட்டில் அதிமுக ITWING இயங்கும், சமூக வலைதளங்களில் மற்றவர்களை போன்று அநாகரீகமாக நடந்துகொண்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK CASE CHENNAI HC JUDGEMENT 312024


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->