புத்தாண்டு தினத்தில் கோவையில் கண்ட புது எழுச்சி.. விட்ட இடத்தில் இருந்தே மீண்டெழும் தமிழினம் - அலறியடித்து ஓடப்போகும் அயல்நாட்டு நிறுவனங்கள்.! - Seithipunal
Seithipunal


ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக திகழும் மூன்று துறைகள் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவை தான்.

ஆனால், வளர்ச்சிக்கு அவசியமான இந்த  மூன்று துறைகளுக்குமான  நிதி ஒதுக்கீட்டை கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக அரசு குறைத்து வந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல்  வெளியாகியுள்ளது. வாக்கு வங்கி அரசியல் செய்வதற்காக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிமுக அரசு தொடர்ந்து குறைத்து வருவது பிற்போக்கானது.

வேளாண்துறைக்கு அனைத்து மாநில அரசுகளும் சராசரியாக 6.20% ஒதுக்கும் நிலையில், தமிழகம் அதைவிட குறைவாக 6.1% மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. பாசனவசதிகளை மேம்படுத்த 5.3% நிதியை அனைத்து மாநிலங்களும் ஒதுக்கீடு செய்யும் நிலையில், தமிழக அரசு 2011-15 காலத்தில் 2.0% நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

அதுவும் கூட 2016-19 காலத்தில் 1.60 விழுக்காடாக குறைந்து விட்டது. அண்டை மாநிங்களான தெலுங்கானா ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 14 விழுக்காட்டையும், ஆந்திரா 13.70 விழுக்காட்டையும் பாசனத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யும் நிலையில் தமிழகம் ஒதுக்கீடு செய்யும் தொகை மிகவும் குறைவாகும். அதனால் தான் தமிழகத்தில்  அத்திக்கடவு-அவினாசி திட்டம் உட்பட கடந்த 65 ஆண்டுகளாக எந்த பாசனத் திட்டமும் செயல்படுத்தப் படவில்லை.

கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம் ஆகிய 4 முக்கியத் துறைகளுக்குமே தமிழக அரசு  ஒதுக்கும் நிதி தேசிய சராசரியை விட மிகவும் குறைவு ஆகும்.  மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு துணை நிற்கும் இன்னொரு விஷயம் அடிப்படைக் கட்டமைப்பு  வசதிகள் ஆகும்.

விவசாயம், நீர்ப்பாசனம், மின்சாரம், சாலைகள், வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் சராசரியாக 32% நிதியை செலவிடுகின்றன.

தெலுங்கானா மிக அதிகமாக அதன் நிதிநிலை அறிக்கை மதிப்பில் 63 விழுக்காட்டை செலவிடுகிறது. பின்தங்கிய மாநிலங்கள் என்றழைக்கப்படும் சத்தீஸ்கர் 42%, மத்தியப் பிரதேசம் 38%, ஒதிஷா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் தலா 37%, பிகார், ராஜஸ்தான் தலா 36% நிதியை ஒதுக்குகின்றன.

ஆனால், முன்னேறிய மாநிலம் என்று பெருமிதப்படும் தமிழகம் ஒதுக்கிய தொகை 24% மட்டும் தான். இது தேசிய சராசரியான 32 விழுக்காட்டில் நான்கில் மூன்று பங்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியலின் நிலை இப்படி இருந்த போதிலும் தற்போது இயற்கை விவசாயம் மீதான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் பண்ணை நிலங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாவதை கண்கூடாக காணமுடிகிறது.

முன்பெல்லாம் பெரிய பெரிய நிறுவனங்களில் இருந்து ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுப்பதை தான் செய்திதாள்களில் வழக்கமாக காண முடிந்தது. இந்த நிலையில், 'விவசாயி' வேலைக்கு தேவை என்று கோவையை சேர்ந்த நிறுவனத்தின் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு காலம் வழக்கமான ஒன்றை பார்த்து சலித்துப்போன நம் மக்களுக்கு, மகிழ்ச்சியூட்ட கூடிய வகையில் நம் பாரம்பரிய பாணியை நோக்கி பயணத்தை செலுத்துகின்ற இது போன்ற முயற்சியை ஊக்கப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

agri advertisement coimbtaore


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->