வாட்டிய வறுமை.. வெளிநாடு சென்ற இளைஞர் திரும்பி வந்த கோலத்தை கண்டு தாய் அதிர்ச்சி.!
After four months of struggle the tragedy of his son who went abroad to work to alleviate family poverty, was rescued
குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி உரு குலைந்து நாடு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நாடு திரும்பி இருக்கிறார் அந்த இளைஞர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சார்ந்தவர் சுப்பையா இவரது மனைவி அழகி இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். கட்டிட வேலை செய்து வந்த சுப்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில்அவர் தனது காலை இழந்ததால் வேலையில் தொடர முடியாத சூழ்நிலை உருவானது.

இதனைத் தொடர்ந்து அவர்களது குடும்பம் வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டது. குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக அவர்களது மகன் வீரபாண்டி மத்திய கிழக்கு நாடான பக்ரைன் சென்று அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக அவர்களது குடும்பத்திற்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து மகனை அங்கிருந்து மீட்டு தாயகம் கொண்டு வர பல அதிகாரிகளை சந்தித்து உதவி கூறினார் தாய் அழகி. தாயின் நான்கு மாத போராட்டத்திற்கு பின் பகரைனிலிருந்து சென்னை வந்தடைந்தார் வீரபாண்டி. விமான நிலையத்தில் மகனின் கோலத்தைப் பார்த்து தாய் கதறி அழுத காட்சி காண்போரின் நெஞ்சையும் உறைய வைக்கும் வகையில் இருந்தது.
English Summary
After four months of struggle the tragedy of his son who went abroad to work to alleviate family poverty, was rescued