செம்மண் கடத்திய வழக்கில், பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பாதுஷா கைது! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி : குருபரப்பள்ளி அடுத்த கொண்டப்பநாயனப்பள்ளி அருகே, நேற்று நள்ளிரவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  

அப்போது, அந்த வழியாக டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக செம்மண் ஏற்றி செல்வதை அறிந்து, தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். 

ஜிங்களூர் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சர்தார் பாஷாவிடம் (வயது 36) அளித்த வாக்குமூலத்தின்படி, சின்ன மனவராணப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பாதுஷா-க்கு (வயது 54) உத்தரவு பெயரில் செம்மண் கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, டிப்பர் லாரி ஓட்டுநர் சர்தார் பாஷா, ஊராட்சி மன்ற தலைவர் பாதுஷா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், ஒரு தகவலாக கைது செய்யப்பட்ட பாதுஷா,  வேப்பனப்பள்ளி அதிமுக சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளராக இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk village president arrested


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->