அதிமுக வைத்தியலிங்கத்தின் மருமகன் மிரட்டலால், வாலிபர் தற்கொலை.. தஞ்சாவூரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு புதூர் வடக்குத்தெரு பகுதியை சார்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகன் வினோத்குமார் (வயது 32). இவரது மகன் வினோத்குமார் (வயது 32). இவர்கள் இருவரும் தஞ்சாவூரில் ஹார்டுவேர் கடை நடத்தி வந்துள்ளனர். 

இவர்களது அண்டை வீட்டை சார்ந்தவர் குணசேகரன். இவரது மகன் மருத்துவர் கார்த்தி, அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் வைத்தியலிங்கத்தின் மகளை திருமணம் செய்துள்ளார். 

கோவிந்தராஜனுக்கும் - குணசேகரனுக்கும் இடையே சொத்து தகராறு நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது கார்த்திக் வினோத்குமார் மற்றும் அவரது தந்தை கோவிந்தராஜை தாக்கியுள்ளார். 

மேலும், உங்களை குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டவே, மிகுந்த பயத்திற்கு உள்ளாகிய வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில், கார்த்திகை கைது செய்ய வேண்டும் என்று கோவிந்தராஜனின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Vaithilingam Daughter in Law Threatening Youngster Suicide Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal