அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!
ADMK Ex Minister RM Veerappan Passed Away
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இன்று உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 97.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பன்.
வயது மூப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக சிகிச்சையில் இருந்துவந்த ஆர்.எம்.வீரப்பன், இன்று காலமானார்.
ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பாட்ஷா படத்தை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எம்ஜிஆர் மட்டுமின்றி சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ் ஆகியோரின் படங்களையும் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்துள்ளார்.
எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன், இதயக்கனி உள்ளிட்ட படங்களையும் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்துள்ளார்.
கமல் நடிப்பில் வெளியான காக்கி சட்டை, காதல் பரிசு உள்ளிட்ட படங்களையும் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்துள்ளார்.
மேலும், ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா, மூன்று முகம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
ADMK Ex Minister RM Veerappan Passed Away