திமுக அமைச்சர், எம் எல்.ஏ-க்களை விரட்டி அடிக்கும் மக்கள் - அதிமுக வெளியிட்ட வீடியோ!
admk dmk mla minister election 2026
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடந்த நான்கரை ஆண்டுகளாக தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளைச் செவிமடுக்கக் கூட நேரமின்றி, கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்ற மூன்றையே தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்ட திமுக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும்,
தேர்தல் நெருங்கியதை அடுத்து தங்களது தொகுதிகளுக்குள் செல்லும்போது, தொகுதி மக்கள் அவர்களை நேருக்கு நேர் நிறுத்தி அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை வீசி வருகின்றனர்.
இது திமுக அரசுக்கு எதிராக உருவாகி வரும் எதிர்ப்பலையின் ஒரு சிறு துளி மட்டுமே. இன்னும் காலம் நெருங்க நெருங்க, மக்களின் கோபமும் விரக்தியும் பெருவெள்ளமாக மாறி, தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சி மட்டுமல்ல திமுக என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருந்து துடைத்தெறியப்படும்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
admk dmk mla minister election 2026