பரிதாபமாக உயிரிழந்த அதிமுக கவுன்சிலர் - சோகத்தில் தொண்டர்கள்.!
admk counsilar died in accident
பரிதாபமாக உயிரிழந்த அதிமுக கவுன்சிலர் - சோகத்தில் தொண்டர்கள்.!
மதுரையில் அதிமுக சார்பில் பிரமாண்ட அளவில் நடைபெறும் மாநாட்டிற்கான முன் ஏற்பாடுகளில் கந்தர்வக்கோட்டையின் முன்னாள் எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகம், அன்னவாசல் ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் கவுன்சிலருமான சாம்பசிவம் உள்பட பலர் பார்வையிட்டுள்ளனர்.
இதையடுத்து, அனைவரும் காரில் சொந்த ஊருக்கு திரும்பும் போது தாவுது மில் நிறுத்தத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, ஒன்றியச் செயலாளர் சாம்பசிவம் தனது ஊரான மருதாந்தலை செல்வதற்கு தனது மகனை வரச் சொல்லி இருந்தது.

இந்த நிலையில், சாம்பசிவம் முத்துடையான்பட்டி பெட்ரோல் பங்க் அருகே தனது மகன் கார் நின்ற பக்கத்திற்கு சாலையை கடந்துச் சென்ற போது திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி அதிவேகமாக வந்த கார் சாம்பசிவத்தை அடித்து தூக்கி வீசியது.
இதில் சாம்பசிவம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம், மாநாட்டில் பங்கேற்றுள்ள தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
admk counsilar died in accident