ரூ. 8000 கூப்பினால் பறிபோன உயிர்..! திமுக எப்படி தரங்கெட்ட தறிகெட்ட அரசியலை செய்துவருகிறது என்பதற்கு இதுவே சாட்சி - அதிமுக கடும் கண்டனம்!
ADMK Condemn to DMK Mannachanallur Candidate and MK Stalin
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதி தலித் சமூகத்தைச் சேர்ந்த சிந்துஜா என்ற இளம்பெண், திமுகவினரின் திட்டியதால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், அதிமுக விடுத்துள்ள கண்டனச் செய்தியில், "மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கிட்னி புகழ் கதிரவனின் ஆதரவாளர்கள் ஆபாசமாக பேசிய மன உளைச்சலில் பெண் ஒருவர் தன் உயிரை மாய்த்துகொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
மக்களின் கிட்னியை திருடுவது,
கேள்வி கேட்கும் மக்களை திட்டுவது,
ஆதரவாளர்களை விட்டு பெண்ணை ஆபாசமாக பேசி தற்கொ* என்ற கொடிய நிலைக்கு தள்ளுவது,
திமுக எப்படி தரங்கெட்ட தறிகெட்ட அரசியலை செய்துவருகிறது என்பதற்கு இதுவே சாட்சி !
அதிகார ஆணவத்தில் மக்கள் உறுப்புகளை, உயிர்களைக் கூட பறிக்கத் துணிந்துவிட்ட இந்த தீயசக்திகளை நமது வாக்குகளால் ஓட ஓட விரட்டுவோம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DMK Mannachanallur Candidate and MK Stalin