தே.மு.தி.கவுக்கு வழங்க முடியாது... அ.தி.மு.க தரப்பு திட்டவட்டம்!
ADMK cannot given Rajya Sabha post DMDK plan
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை தீவிரப்படுத்தி வருகிறது.
அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க ராஜ சபா கேட்பதால் அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் 14 தொகுதி மற்றும் ஒரு ராஜ சபா உறுப்பினர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராஜசபா உறுப்பினர் பதவிக்கு பதிலாக கூடுதலாக ஒரு மக்களவைத் தொகுதி தே.மு.தி.கவிற்கு வழங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தே.மு.தி.க வழங்கிய பட்டியலில் மதுரையை வழங்குவது கடினம் எனவும் அ.தி.மு.க தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து எம்.எல்.ஏக்களின் பலம் அடிப்படையில் ராஜ சபா சீட் தே.மு.தி.கவிற்கு வழங்க முடியாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
ADMK cannot given Rajya Sabha post DMDK plan