நடிகை கவுதமியின் மோசடி புகார்: தொழிலதிபர் வீட்டில் விடிய விடிய துப்புதுலக்கிய போலீசார்!
actress Gautama complaint police raid karaikudi businessman house
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி தமிழகத்தில் பல இடங்களில் தான் சம்பாதித்த பணத்தில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கி இருந்தார்.
இதனை விற்பனை செய்வதற்காக சிவகங்கை, காரைக்குடி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் குடும்ப நண்பரான இவரை கவுதமி பவர் பத்திரம் மூலம் அதிகாரம் கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால் அழகப்பன் கவுதமியின் சொத்துக்களை விற்பனை செய்து அதற்கான பணத்தை முழுமையாக கொடுக்காமல் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாவும் சொத்துக்கள் ஆவணங்களை வேறொரு பெயருக்கு மாற்றி விட்டதாகவும் புகாரில் இருந்தது.
இதனால் கவுதமி சென்னை மாநகர மத்திய குற்றப்புலனாய்வு போலீசில், தன்னை ஏமாற்றி பல கோடி பணத்தை மோசடி செய்ததாக புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சொத்து மோசடி குறித்து விசாரணை நடத்துவதற்காக நேற்று காரைக்குடி சென்றனர். பின்னர் அழகப்பனுக்கு சொந்தமான வீட்டில் வருவாய் துறை அதிகாரிகளில் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் அவரது வீட்டில் நடிகை கவுதமியின் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா என போலீசார் சோதனை மேற்கொண்டு வீடியோவாக பதிவு செய்தனர்.

இது சோதனை மதியம் தொடங்கி நள்ளிரவில் தாண்டி விடிய விடிய நடத்ததில் மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. போலீசார் இன்று அதிகாலை அழகப்பன் வீட்டில் கைப்பற்றிய சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.
பல ஆண்டுகளாக நடிகை கவுதமி பாரதிய ஜனதாவில் இருந்து வந்த நிலையில் இந்த மோசடி புகார் விவகாரத்தில் அதிருப்தி அடைந்து அந்த கட்சியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
actress Gautama complaint police raid karaikudi businessman house