தமிழக முதல்வரை நேரில் சந்தித்த மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி.! - Seithipunal
Seithipunal


பசுமை காதலன் என்றழைக்கப்படும் மறைந்த நடிகா் விவேக், மரம் நடுதலை தன் வாழ்நாளில் மிகப்பெரிய பணியாக செய்துவந்தார். 

இயற்கை மீதும், மரங்களின் மீது அன்பு கொண்ட நடிகர் விவேக் சுமாா் ஒரு கோடிக்கும் அதிக மரங்களை நட்டதோடு அவற்றை பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்தார்.

இவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் அனுசரிக்கப்பட்டநிலையில், இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை, நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு விவேக் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அருட்செல்வி அளித்தார். 

இந்த சந்திப்பின்போது விவேக்கின் மகள் அமிர்தாநந்தினி, விவேக் பசுமை கலாம் இயக்கத்தின் நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் உடன் வந்திருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor vivek wife meet cm stalin


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->