கடைக்குட்டி சிங்கம் படம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
கடைக்குட்டி சிங்கம் படம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம் ''கடைக்குட்டி சிங்கம்''. இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஒரு விவசாயியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்திருக்கிறார். மேலும், பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் கார்த்திக்கின் அப்பாவாக சத்யராஜ், சகோதரிகளாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி நடித்துள்ளனர். நண்பர்களாக சூரி, ஸ்ரீமன் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சென்சாரில் யு சான்றிதழை பெற்றுள்ள இந்த படம் இன்று ஜூலை 13-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
English Summary
Actor Karthi Kadaikutti Singam Movie Making Video