புதிய விக்டோரிஸ்’ கார் ..முதல் விற்பனையை தொடங்கிவைத்த நடிகர் கோபிநாத்!
Actor Gopinath has launched the first sale of the new Victoria car
கோவையில் மாருதி சுசூகி கார் ஷோ விற்பனை அனைத்து வசதிகளும் கொண்ட ‘விக்டோரிஸ்’ கார் அறிமுக விழாவில் சின்னத்திரை நட்சத்திரம், கோபிநாத் கலந்துகொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள அம்பாள் ஆட்டோ டீலர்ஷிப்பான, மாருதி சசுசூகி அரீனா, விற்பனை நிலையத்தில், மாருதி சுசூகி நிறுவனத்தின் புது சொகுசு காரான விக்டோரிஸ், எனும் கார் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து வசதிகளும் கொண்ட ‘விக்டோரிஸ்’ கார் அறிமுக விழா நிகழ்ச்சியில் அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோகன் முத்துசாமி, துணை தலைவர் அனீஸ் முத்துசாமி, இயக்குனர் சந்தான செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சின்னத்திரை நட்சத்திரம், கோபிநாத் அறிமுகம் செய்து விக்டோரிஸ்’ கார் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜேஷ் ஜெயராமன் கூறியதாவது…பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த மாருதி சுசூகி விக்டோரிஸ் காரை அறிமுகம் செய்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி, எனவும், இது ஒரு ப்ரீமியம் வகை கார், எனவும், மாருதி சுசூகியின் வரலாற்றில் இத்தனை வசதிகள் அடங்கிய ஒரு காரை இதற்கு முன்னர் இதன் விற்பனை நிலையங்களில் அறிமுகம் செய்தது இல்லை எனவும்,இந்த காரில் இல்லாத வசதிகளே இல்லை என்பதை குறிப்பிடும் வகையில் இதன் ஸ்லோகன் அமைந்துள்ளது என்றார். மிகவும் பாதுகாப்பான கார் என்பதை உணர்த்தும் வகையில் 5 நட்சத்திர புள்ளிகள் பெற்றுள்ளதாகவும், தெரிவித்தார்.
மேலும்பல்வேறு வசதிகள் கொண்ட இந்த கார் 10லட்சதுது 99 ஆயிரம் முதல் 19 லட்சத்து 99 ஆயிரம் வரை அறிமுகம் ஆகியுள்ளது. மிகவும் ஸ்டைலான இந்த கார், 10 வித வண்ணங்களில் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த காரின் ஸ்டைல் மற்றும் வசதிகளை இந்தியா முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் பாராட்டியுள்ளதாகவும், சமீபத்தில் வெளிவந்த கார்களில் இவ்வளவு சாதகமான விமர்சனங்கள் பெற்ற கார் எதுவும் இல்லை என்றே பார்க்கப்படுகிறது என்பது பெருமை படும் அளவுக்கு உள்ளது என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Actor Gopinath has launched the first sale of the new Victoria car