பிரபல நடிகரும், இயக்குனருமான டி.பி.கஜேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்..!!
actor and director TP Rajendran passed away due to ill health
தமிழ் திரையுலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இயக்குனர் டி.பி.கஜேந்திரன். இவர் புகழ்பெற்ற நடிகை டி.பி.முத்துலட்சுமி அவர்களின் மகனாவார். இயக்குனர் விசுவின் உதவியாளராக பணியாற்றி வந்த இவர் அவரை போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிலாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல படங்கள் உருவாகியுள்ளது. அதேபோன்று பந்தா பரமசிவம், சந்திமுகி, வேலாயுதம், வில்லு, பேரழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் உடல்நலகுறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையு உலகில் அடுத்தடுத்த மரணங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
actor and director TP Rajendran passed away due to ill health